யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் இருந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் நாகப்பட்டினம் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று(19.06.2026) இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்றிருந்த வேளை காணாமல் போயுள்ளார்.
இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணைகளுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.
இந்நிலையில், இன்று(19) அவரது சடலமாக தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து உரிய விசாரணைகளின் பின்னர் அவரது சடலம் இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது





