கடந்த மே 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் மாத்திரம் நாடு முழுவதும்
இடம்பெற்ற 19 வீதி விபத்துக்களில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகப்
போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப்
பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டப்ளியூ.பீ.ஜே. சேனாதீர
தெரிவித்துள்ளார்.
இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்தத் திடுக்கிடும்
புள்ளிவிபரங்களை வெளியிட்டார்.
குறித்த இரு தினங்களில் பதிவான ஒட்டுமொத்த விபத்துக்களில்
கடந்த 2 நாட்களில், 19 வீதி விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இக்காலப்பகுதியில் 29 கடுமையான விபத்துக்களும், 96 சிறிய விபத்துக்களும், 19 சேத விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.







