இலங்கை மெதடிஸ்த திருஅவையின் ஒருங்கிணைப்பில், மட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபையின் 212 வது ஆண்டு நிறைவு விழா நேற்று (29.06.2026) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் மிக எழுச்சியாக நடைபெற்றது!
ஆன்மீகப் பணியோடு கல்வி மற்றும் சமூக மாற்றங்களை ஏற்படுத்திய மிஷனரிமார்களின் அளப்பரிய அர்ப்பணிப்பை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. விழாவில் சிறப்பு ஆராதனைகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் மிஷனரிமார்களின் தியாக வரலாற்றைச் சித்தரிக்கும் விசேட கண்காட்சியும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், இராசமாணிக்கம் சாணக்கியன், கந்தசாமி பிரபு மற்றும் மாநகர சபை முதல்வர், அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள், சர்வ மதத் தலைவர்கள், திருச்சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். சாதி, மத பேதமின்றி பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று இந்நிகழ்வை சிறப்பித்தமை மட்டக்களப்பின் மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக அமைந்தது.









