மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் மாதாந்த முதியோர் நலத்திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழா-2026

 



 





 

  





























 















  
 செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மாதாந்த முதியோர் நலத்திட்டத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கேட்போர் கூடத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர். ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில்  தொற்றா நோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். எம். ருதேஷன் அவர்களின் ஒருங்கமைப்பில்   20/6/2026 அன்று நடைபெற்றது 

 
இந்நிகழ்வின் அதிதிகளாக செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எம். கீர்த்திகா,பிராந்திய வைத்திய அதிகாரிகளான டாக்டர்  சகாயதர்சினி டாக்டர் கோகுலரமணா ,டாக்டர்.என். நிரஞ்சன் (UK), திருமதி சர்மி உதயகுமார், விவேகானந்தா சமூகத்தின் தலைவர் திரு. எஸ். சரவணபவன், நோபல் மரியசீலம் புற்றுநோய் சங்கத்தின் தலைவர் மற்றும் சட்டத்தரணி திரு. சவுந்தரராஜா, ஓய்வுபெற்ற மாவட்ட சமூக சேவை அதிகாரி திரு. அருள்மொழி, மாவட்ட அபிவிருத்தி அதிகாரி திருமதி கோணேஸ்வரன், மாவட்ட சமூக சேவை அதிகாரி திரு. சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இத்திட்டத்தின் கீழ், முதியோர்களுக்காக மாதந்தோறும் தொடர்ச்சியான சுகாதார பரிசோதனைகள், மனநல ஆலோசனைகள், உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகள், சட்ட ஆலோசனைகள், சமூக மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்ச்சித் தொடரின் சாதனைகளை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின்   நோக்கம்   செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி  பிரிவில்  நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இம்மாதிரியான முதியோர் நல சேவைகள் மாவட்டத்தின் ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி  பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும். 
மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், சமூக சேவைத் திணைக்களம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் மேலும் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

மேலும், இத்திட்டத்தின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், சமூக சேவை அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவளித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.


 இதில் 75-க்கும் மேற்பட்ட முதியோர்கள் கலந்துகொண்டதுடன் அவர்களின் திறமைகளும் வெளிக்காட்டப்பட்டன.