தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சினால் அவசர காலநிலை நடவடிக்கை "Urgent Climate Action" எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட பொலித்தீன் பைகளுக்கு மாற்றீடாக துணிப்பைகளை வழங்கும் நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளரின் தலைமையிலும், உதவி பிரதேச செயலாளரின் வழிகாட்டலிலும், பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஒருங்கமைப்பு மற்றும் ஆலோசனைக்கிணங்கவும், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் பங்குபற்றலுடன் 12.06.2026 மு.ப 8.30 மணியளவில் , ஆரையம்பதி பொதுச் சந்தையில் இந்நிகழ்வானது இடம்பெற்றது.
இந் நிகழ்வின் போது அதிதிகளை வரவேற்றதுடன் மௌன இறைவணக்கம் நிகழ்த்தப்பட்டு பிரதி திட்டமிடல் பணிப்பாளரினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து பிரதேச செயலாளர் மிகச் சிறப்பான முறையில் தலைமை உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தரால் திட்டத்தின் விளக்கவுரை நிகழ்ந்ததை தொடர்ந்து சந்தை பயனாளிகளுக்கும், அலுவலக உத்தியோகத்தர்களுக்கும் துணிப்பை வழங்கும் நிகழ்வானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளரினால் தொடங்கி வைக்கப்பட்டது இதன் போது மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தரால் காலநிலை மாற்றத்திற்கு எதிராக செயல்படுவோம், சுற்றுச்சூழல் மாற்றம் பொலித்தீன் பைகளுக்கு எதிரான விழிப்பூட்டல் உரை என்பன மக்களிடையே பகிரப்பட்டன.
இந்நிகழ்வின் போது சிவா வித்தியாலய மாணவர்களினால் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைக்கு எதிரான பதாதைகள் ஏந்திய விழிப்புணர்வூட்டும் பேரணி நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர், பிரதேச செயலகத்தின் சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்,
மண்முனைபற்று பிரதேச செயலகத்தின் அலுவலக உத்தியோகத்தர்கள்,
சிவா வித்யாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர் குறிப்பிடத்தக்கது.
.jpeg)

.jpeg)

.jpeg)



.jpeg)



.jpeg)





