வெல்லம்பிட்டி பகுதியில் சுமார் 19 கோடி ரூபாய் பெறுமதியான போலி
டொலர்களுடன் பெண் ஒருவர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்
கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.





