Sivakumar- Editor-in-Chief
இப்போட்டிகள் நேற்று (12.06.2026) கல்லடி உப்போடை விவேகானந்தா பெண்கள் கல்லூரியின் பிரதான ஒன்று கூடல் மண்டபத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றன. மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பல பாடசாலை அணிகள் இதில் விறுவிறுப்புடன் கலந்துகொண்டன.
மாகாண மட்டப் போட்டிகளுக்கு தகுதிபெறும் நோக்குடன் நடைபெற்ற இத்தொடரில், 17 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலார் பிரிவுகளிலும் மட்/ மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா பாடசாலை அணிகள் களம் கண்டன.
ஆரம்பம் முதலே திறமைகளை வெளிப்படுத்திய மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா பாடசாலையின் இருபாலார் அணிகளும், தாம் எதிர்கொண்ட அனைத்துப் போட்டிகளிலும் எதிரணிகளை வீழ்த்தி, தொடர் வெற்றிகளைப் பெற்று முதலிடத்தைச் தமதாக்கிக் கொண்டன.
அணிகளின் இந்த அபார வெற்றியின் மூலம், மாகாண மட்ட கரம் போட்டிகளில் மட்டக்களப்பு கல்வி வலயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடும் தகுதியையும், பெருமையையும் மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா பாடசாலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
வெற்றிபெற்று பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமை சேர்த்த மாணவ வீரர்களுக்கும், அவர்களுக்குப் பயிற்சியளித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோருக்கு
Battimedia.lk ஊடகம் தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது

.jpeg)








