யோஷித ராஜபக்ஷ எதிர்வரும் 16ஆம் திகதி லஞ்ச அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

 


இலங்கை கடற்படையில் லெப்டினன்டாகப் பணியாற்றினார் எனக் கூறப்படும் யோஷித ராஜபக்ஷ, சட்டபூர்வமான நடைமுறைகளை மீறி பிரித்தானியாவில் கடற்படைப் பயிற்சியொன்றில் பங்கேற்றமை குறித்து விசாரணை நடத்துவதற்காக, எதிர்வரும் 16ஆம் திகதி லஞ்ச அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி கடற்படையில் இணைந்துகொண்ட யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்றுள்ள பல முறைப்பாடுகள் தொடர்பில் இதன்போது அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடற்படையில் இணைத்துக்கொள்ளப்படும் போது பரிசீலிக்கப்பட்ட கல்வித் தகைமைகள் மற்றும் கடற்படையில் அவருக்கு வழங்கப்பட்ட வெளிநாட்டுப் பயிற்சிப் பாடநெறிகள் ஆகியவை சட்டத்திற்குப் புறம்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்த விசாரணைகளை ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஆரம்பித்துள்ளது.