இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்கும் நோக்கில், சீனாவிலிருந்து 104க்கும் மேற்பட்ட அதிநவீன போடோன் (FOTON) மெட்ரோ பேருந்துகளை இலங்கையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் விசேட நிகழ்வு அண்மையில் சீனாவின் பீஜிங் நகரில் உள்ள போடோன் சர்வதேச நிறுவனத்தின் பிரதான தொழிற்சாலையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் 'லங்கா மெட்ரோ டிரான்சிட்' (Lanka Metro Transit) நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேருந்துகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.
இலங்கையில் பாதுகாப்பான, நவீன மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்துவதற்காக இந்த சொகுசுப் பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், இது நாட்டின் போக்குவரத்துத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.





