உலகின் மிக நீளமான உணர்திறன் பலகைக்கான (world’s longest sensory board) கின்னஸ் உலக சாதனையை வென்று இலங்கை அதிகாரப்பூர்வமாக வரலாறு படைத்துள்ளது.

 



 

 Tree House International நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் மெராக் 2026 (Merak 2026) திட்டத்தின் மூலம், உலகின் மிக நீளமான உணர்திறன் பலகைக்கான (world’s longest sensory board) கின்னஸ் உலக சாதனையை வென்று இலங்கை அதிகாரப்பூர்வமாக வரலாறு படைத்துள்ளது.

இலங்கை முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களின் பங்களிப்புடன், ஆட்டிசம் விழிப்புணர்வு என்ற ஒரே செய்தியுடன் கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட, சாதனை படைத்த மெராக் பாணி உலகின் நீண்ட உணர்திறன் பலகைகள்,  சனிக்கிழமை காலை தொடக்கம் BMICH-ல் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டன .

இன்று 2026.05.18 மாலை வரை குறித்த உலகின் நீண்ட உணர்திறன் பலகைகளை பார்வையிட முடியும்.
இதன்படி ஒவ்வொரு உணர்வுப் பலகையும் ஒவ்வொரு வித்தியாசமான கதையைச் சொல்கின்றமை குறிப்பிடத்தக்கது.