மெட்டா நிறுவனம் தனது பயனர்களுக்காக முற்றிலும் தனிப்பட்ட முறையில் செயற்கை நுண்ணறிவுடன் (AI) உரையாடும் வகையில் “Incognito Chat” வசதியை அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ்அப்பின் “தனியார் செயலாக்க” (Private Processing) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த உரையாடல்களை மெட்டா நிறுவனத்தால் கூட பார்க்க முடியாது.
இதில் பரிமாறப்படும் செய்திகள் சேமிக்கப்படாது; உரையாடல் முடிந்தவுடன் செய்திகள் தானாகவே மறைந்துவிடும்.
பயனர்கள் கேட்கும் கேள்விகளையோ அல்லது AI வழங்கும் பதில்களையோ மெட்டா நிறுவனத்தால் பார்க்க முடியாது என அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
ஆரோக்கியம், நிதி விவகாரங்கள் மற்றும் தொழில்முறை ஆலோசனைகள் போன்ற முக்கியமான மற்றும் தனிப்பட்ட விடயங்களை AI-உடன் பகிர விரும்புவோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
இத்துடன், வரும் மாதங்களில் “Sidechat” என்ற புதிய வசதியையும் அறிமுகப்படுத்த மெட்டா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், ஒரு சாதாரண உரையாடலுக்கு இடையூறு விளைவிக்காமல், அதே திரையில் AI-இன் உதவியைப் தனிப்பட்ட முறையில் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த “Incognito Chat” வசதி வரும் மாதங்களில் வாட்ஸ்அப் மற்றும் Meta AI செயலிகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





