தமிழ் திரைப்பட சங்கம் ஆஸ்திரேலியா (TFAA) Inc. அமைப்பு, மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆஷ் அம்பிகைப்பாகர் அவர்களை “கூத்தாடி” திரைப்பட தயாரிப்பாளர் சந்தித்தார் .

 




 

 

 தமிழ் திரைப்பட சங்கம் ஆஸ்திரேலியா (TFAA) Inc. – மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆஷ் அம்பிகைப்பாகர் அவர்களை சந்திப்பு  ,ஹோக்கரா/ சிட்னி, ஆஸ்திரேலியா



தமிழ் திரைப்பட சங்கம் ஆஸ்திரேலியா (TFAA) Inc. அமைப்பு, மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆஷ் அம்பிகைப்பாகர் அவர்களை இன்று அவருடைய அலுவலகத்தில் சந்திக்கும் பெருமையை பெற்றது. இந்த சந்திப்பு “கூத்தாடி” திரைப்படம் தொடர்பான கலாசார உரையாடல் மற்றும் தமிழ் பாரம்பரிய கலை வளர்ச்சி குறித்து நடைபெற்றது.

இந்த சந்திப்பில் இரவீ மற்றும் திரு ஷெல்வின் தாஸ் அவர்கள் கௌரவ ஆஷ் அம்பிகைப்பாகர் அவர்களுக்கு பாரம்பரிய பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர். அதேபோல், “கூத்தாடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் நாடகம், கலை மற்றும் பாரம்பரிய பண்பாட்டுக்கு வழங்கிய பங்களிப்பை பாராட்டி, கௌரவ ஆஷ் அவர்களும் நடிகரும் தயாரிப்பாளருமான திரு ஷெல்வின் தாஸ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

சந்திப்பின் போது “கூத்தாடி” திரைப்படம் பாரம்பரிய கிராமிய கூத்து கலை, நாடக மரபு மற்றும் தமிழ் பண்பாட்டு அடையாளத்தை ஆஸ்திரேலியாவிலும் தாயகத்திலும் உள்ள இளம் தலைமுறைக்கு கொண்டு செல்லும் முக்கியத்துவம் குறித்து கௌரவ ஆஷ் அவர்கள் உரையாற்றினார். தமிழ் திரைப்பட சங்கம் ஆஸ்திரேலியா (TFAA) Inc. அமைப்பிற்கும், திரு ஷெல்வின் தாஸ் அவர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

மேலும், ஆஸ்திரேலிய தமிழ் சமூகமும் இளம் தலைமுறையும் “கூத்தாடி” திரைப்படத்தை பார்த்து எங்கள் பாரம்பரிய கிராமிய கூத்து கலையை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழ் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாத்து வளர்க்கும் கௌரவ ஆஷ் அம்பிகைப்பாகர் அவர்களின் அர்ப்பணிப்புக்கும் ஆதரவுக்கும் தமிழ் திரைப்பட சங்கம் ஆஸ்திரேலியா (TFAA) Inc. தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

இரவீ ஆனந்தராசா
Public Officer 
Tamil Film Association Australia (TFAA) Inc.