பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மல்வானைமாளிகையை (IUFS) மாணவர்களின்பயன்பாட்டிற்காக வழங்க வேண்டும் என கோரிக்கை .

 

 


பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்டு, தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மல்வானையில் அமைந்துள்ள 16 ஏக்கர் நிலத்தையும் அங்கிருக்கும் சொத்துக்களையும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் (IUFS)  மாணவர்களின் தேவைக்காக பயன் படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது  ..
​அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் கடும் விடுதிப் பற்றாக்குறை மற்றும் இடவசதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, இந்தச் சொத்துக்களை உடனடியாக மாணவர்களின் பயன்பாட்டிற்காக வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
​இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் சசிந்து பெரேரா, பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது பாரிய நலன்புரி மற்றும் கல்விசார் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். "புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
மாணவர்களுக்குத் தங்குமிட வசதிகள் இல்லை. இவ்வாறான நிலையில், மாளிகைகள் போன்ற சொத்துக்கள் முடங்கிக் கிடப்பதில் பயனில்லை" என அவர் சுட்டிக்காட்டினார்.
​"திருடப்பட்ட சொத்துக்களை மீண்டும் மக்களிடமே ஒப்படைக்க வேண்டும்"  என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
களனி கங்கையை ஒட்டியுள்ள இந்த அதிக பெறுமதியுடைய சொத்து தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றபோது, அதன் உரிமையைக் கோர எவரும் முன்வரவில்லை என்பதையும் சசிந்து பெரேரா நினைவுபடுத்தினார்.