இந்தியக்
கடற்படையின் நட்புறவுப் பாலங்களை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக,
இந்தியக் கடற்படைக் கப்பலான 'சுனைனா' (INS Sunayna), 16 நாடுகளைச் சேர்ந்த
பன்னாட்டு கடற்படையினருடன் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை
வந்தடைந்தது.
பிராந்திய
ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த
வருகை அமைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் இந்தக் கப்பலுக்கு இலங்கை
கடற்படையினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கப்பலில் உள்ள அதிகாரிகள்
மற்றும் சிப்பாய்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பல்வேறு
இருதரப்பு பயிற்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில்
கலந்துகொள்ளவுள்ளனர். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நட்புறவு
நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
_at_sea.jpg)




