மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழலால் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டிருப்பது, உலகளாவிய உணவுத் துறையில் பெரும் முடக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) எச்சரித்துள்ளது.
விவசாயத்திற்கு அவசியமான உரங்கள் மற்றும் எரிசக்தி விநியோகம் தடைபடுவதால், அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் சர்வதேச சந்தையில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து, பெரும் பற்றாக்குறைப் பஞ்சம் உருவாகக்கூடும் என்று கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியை எதிர்கொள்ள உலக நாடுகள் உடனடியாக மாற்றுப் பாதைகளைத் திட்டமிட வேண்டும் என FAO வலியுறுத்தியுள்ளது.





