ஏர்ன் சிலோன் நிறுவனத்தின் (Earn Ceylon)அனுசரணையில் கிரான் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு முருங்கை கன்றுகள் வழங்கப்பட்டது.







மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கர்ப்பிணி தாய்மார்களின் போசாக்கு மற்றும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துவதற்காகவும் அவர்களுக்கு  நிலையான வருமானத்தினை ஏற்படுத்தி கொடுப்பதற்கான மரக்கன்றுகள் வழங்கும்  திட்டமானது ஏர்ன் சிலோன் நிறுவனத்தின்  மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கிரான்  பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு  முருங்கை கன்றுகள் வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

கிரான்  பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி, வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், கர்ப்பிணிகள் என பலர் கலந்து கொண்டனர் 

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  முருங்கை கன்றுகள் ஒரு கர்ப்பிணி தாய்க்கு 2 முருங்கை கன்றுகள் வீதம்  இதுவரை காலமும் 2295 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 4590 முருங்கை கன்றுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் திட்டத்தின் முன்னேற்றங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்  என ஏர்ன் சிலோன் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே.சதீஸ்குமார் தெரிவித்தார்.

லண்டன் சிரேஷ்ட வைத்திய ஆலோசகர் சமூக நலன் விரும்பி வைத்தியர் காந்தா நிறஞ்சன் அனுசரணையில் EREEDO நிறுவனத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.மயூரன் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

 

 

  ந.குகதர்சன்