மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருதி குழு கூட்டம்

 


மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு தேசிய மக்கள் மத்திய அரசாங்கம் இந்த வருட வரவு செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் 341 மில்லியன் ரூபாய் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என மண்முனை தென்னருவில் பற்றி பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவரும் தேசிய மக்கள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

 மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருதி குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை(15) பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு  தலைமையில் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான இளையதம்பி சிறிநாத் ஞானமுத்து சிறிநேசன், , பிரதேச செயலாளர் உருத்திரன் உதயசிறிதர், பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினேராஜ் மற்றும் திணைக்களத் தலைவர்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கல்வி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு, சுகாதாரம், விவசாயம், கால்நடை, நீர்பாசனம், போக்குவரத்து, உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

இதன்போது மேலும் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள், இவ்வரும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

அபிவிருத்திக் குழு கூட்டத்தின் நிறைவில் பாராளுமன்ற உறுப்பினர் பிரபு ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த வருடத்திற்கான பிரதேச அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்து இருக்கின்ற நிதியை பயன்படுத்தி இந்த பிரதேசத்திற்கான கிராமிய வீதிகள், வீடமைப்பு வசதிகள், வாழ்வாதார உதவி திட்டங்கள், விவசாயிகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கான செற்றிடங்கள்? பயிற் செய்கைகளுக்கான உதவிகள் போன்ற பல விடயங்களுக்காக நிதி அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.

இன்றைய கூட்டத்தின்போது போக்குவரத்து பிரச்சனை, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி, களுவாஞ்சிகுடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒசுசல மருந்து விநியோக கட்டடத்தினை திறப்பதற்குரிய நடவடிக்கை, போன்ற பல விடயங்களை நாம் இன்று ஆராய்ந்திருந்தோம்.

தேசிய மக்கள் மத்திய அரசாங்கம் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் எந்த பிரதேசமாக இருந்தாலும் அதற்கான நிதிகளை வழங்கி அபிவிருத்தி செய்வதற்காக நாங்கள் முன்னின்று செயற்படுவோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.