பொல்கஹாவெலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று ரெயில் தடம் புரண்டுள்ளது.

 


வனவாசல மற்றும் ஹுனுபிட்டியா இடையேயான இரயில் பாதையில் ஒரு இரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தடம் விலகியதன் காரணமாக, இரயில் பாதையில் ஒரு பெட்டி கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இரயில் பொல்கஹாவெலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில் குறித்த சம்பவம் நிகழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.