விளையாட்டுத்துறை அமைச்சினால் மேசைப்பந்து பயிற்சி கூடம் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பு .















    வரதன் 

புதிய அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் மேசைப் பந்து விளையாட்டு துறையை பாடசாலை மட்டத்தில் மேலும் வலுப்படுத்த முகமாக  அதனை மாகாண தேசிய மட்டம் வரை கொண்டு செல்லும் முகமாக மட்டக்களப்பு வெபர் மைதான உள்ளக அரங்கில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எஸ் தனஞ்செயன் தலைமையில் நேற்று மாலை  இடம் பெற்றது

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் கலந்து கொண்டார் 

இதன்போது பாடசாலை மட்டத்தில் மேசைப்பந்து விளையாட்டை  மாணவர்கள் மத்தியில் சிறப்பாக கொண்டு சென்று சிறப்பாக பணியாற்றிய மட்டு வளையக்கல்வி விளையாட்டு துறை ஆசிரியர் எஸ் ரவீந்திரன் 
 கலந்து கொண்ட அதிதிகளால் கௌரவிக்கப்பட்டார் 

ஆரம்ப நிகழ்வின் போது பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற போட்டிகளின் போது வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிதிகளால்  வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டது 

மட்டு மாநகர சபையின் பிரதி முதல்வர் S. தினேஷ் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் விளையாட்டு பயிற்சி ஆசிரியர்கள் வீரர்கள் பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்