அடுத்த ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்படும்- ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

 


அடுத்த ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 அத்தோடு, அரச சேவையின் சம்பள உயர்வுகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பெரிய பிரச்சினைகள் பல உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், "எங்களுக்கு ஒரு வலுவான அரச சேவை தேவைப்படுகிறது. எமது காவல்துறையினர், முப்படைகள் மற்றும் அரசாங்க அதிபர் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை ஒரு வலுவான அரச சேவை அவசியமாகும்.

நாங்கள் அதற்காகவே உழைத்து வருகிறோம். அரச சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதுடன், அதற்கான முறையான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.