மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஆரைப்பற்றை நொத்தாரிஸ் மூத்ததம்பி வித்தியாலயத்தில் மாணவர்களின் இணைப்பாட,கலைத்திட்டங்களை விருத்தி செய்யும் விற்பனைச் சந்தை


 

 


























மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஆரைப்பற்றை நொத்தாரிஸ் மூத்ததம்பி வித்தியாலயத்தில் மாணவர்களின் இணைப்பாட,கலைத்திட்டங்களை விருத்தி செய்யும் விற்பனைச் சந்தை இன்று(21) காலை அதிபர் து.குகப்பிரியன் அவர்களின் தலைமைத்துவ வழிகாட்டல்,ஆலோசனையின் பிரகாரம் கல்லூரி திறந்தவெளி மைதானத்தில் ஆசிரியர்களான திருமதி.சந்திரகுமாரி ஜீவராசா,திருமதி.சுபத்திரா ராஜு,திருமதி.கமலமலர் சிறிராசா,திருமதி.தர்சனா குகராஜ்,திரு.ரீ.ஜெயகாந்தன் ஆகியோர்களின் ஒருங்கிணைந்த முகாமைத்துவ வழிகாட்டலுடன் பெற்றோர்களின் முழுமையான பங்களிப்புடன்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர் மு.விக்னேஸ்வரன்,சிரேஸ்ட ஆசிரியர்களான திருமதி.சர்மிளா ரஞ்சன் உட்பட பல ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டு மாணவர்களின் விற்பனை சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்தார்கள்.

இச்சந்தையில் மனித வாழ்வியலுக்கு நோய்களை ஏற்படுத்தாத நஞ்சற்ற மருவிச்செல்லும் இலைக்கறிகள்,பழங்கள்,காய்கள்,உள்ளிட்ட 100மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

இச்சந்தையின் மூலம் மாணவர்களின் ஆளுமைப்பண்புகள் ,சிறந்த சமூகத்தொடர்பு,அனுபவம் மாணவர்களுக்கு ஊட்டப்படும்.

 

  வெல்லாவெளி நிருபர்-க.விஜயரெத்தினம்)