பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டமானது தொற்றா நோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ம. ருதேஷன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் சுகாதாரப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் டி. சதானந்தன், போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர், விபுலானந்தா இசை நடனக் கல்லூரி பேராசிரியர் எப்.பி. கெனடி, பேராசிரியர் இ.கருணாகரன்,(புற்று நோய்தடுப்பு சங்கம்),மட்/ போதனா வைத்திய சாலை தொற்றாநோய் வைத்திய அதிகாரி, பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி தாதியர் பயிற்சி பாடசாலை அதிபர், பிராந்திய மேற்பார்வை தாதிய பரிபாலகி, சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச வைத்திய சாலை பொறுப்பு வைத்திய அதிகாரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டனர். மேலும் Cancer Society, FOBS, Family Planning Association (FPA), IMHO உள்ளிட்ட அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தின் போது கடந்த கூட்டத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், மாவட்டத்தில் புற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக மார்பக. புற்று நோயை முன்கூட்டியே கண்டறியும் பரிசோதனை (Mammogram) சேவை மற்றும் ஆய்வக உதவியாளர் பற்றாக்குறை தொடர்பான சவால்களுக்கு தீர்வுகள் காணப்பட்டது.
மேலும், தற்போதுள்ள பிரச்சினைகளுக்கான பல்வேறு ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. சுகாதார அமைச்சு, பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் பணிமனை, சுகாதாரப் பீடம், வைத்தியசாலைகள், மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இணைந்து முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் மாவட்டத்தில் புற்றுநோய் ஏற்படுவதை குறைக்கும் வகையில் சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டது.
எதிர்கால நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பயனுள்ளதாக இக்கூட்டம் அமைந்தது.
.jpeg)
.jpeg)

.jpeg)




.jpeg)





