மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வெசாக் வார நிகழ்வுகள் ஆரம்பம்!!

 


ஸ்ரீ புத்த வருடம் 2570 வது வெசாக் பூர்ண மஹோற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் மேற்பார்வையின் கீழ் வெசாக் வார நிகழ்வுகள் இன்று (27) இடம் பெற்றது.

இதன் ஓர் அங்கமாக வெசாக் வாரத்தின் முதலாவது நாளான இன்று மாவட்ட செயலக வளாகத்தில் அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்த சிரமதான நிகழ்வை மேற்கொண்டதுடன் பயன் தரும் மரக்கன்றுகள் அரசாங்க அதிபரினால் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாடளாவிய ரீதியில் வெசாக் வார நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.