
மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் பாடசாலை வளாக ஒழுக்கம் மற்றும் மாணவர் தலைமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கிலான புதிய ஒழுக்கப் பொறுப்பாளர்கள் தெரிவு செய்யும் நிகழ்வு இன்று (20) புதன்கிழமை காலை 9.00 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி. அருள்தாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக திட்டமிடல் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. கமலமோகனதாசன் மற்றும் ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளரும் பாடசாலை மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளருமான திரு. பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான உத்தியோகபூர்வ சின்னங்கள் அணிவிக்கப்பட்டு பொறுப்புகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்தோடு, மாணவர்கள் பாடசாலை ஒழுக்கத்தையும், தமக்கிடையேயான ஒற்றுமையையும் பேணி முன்மாதிரியாகச் செயற்பட வேண்டுமென இதன்போது அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு புதிய பொறுப்பாளர்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மேலும், பாடசாலை வளாகத்திற்குள் சிறுவர்களின் பொழுதுபோக்கு மற்றும் மகிழ்ச்சியான கற்றல் சூழலை உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட புதிய சிறுவர் பூங்காவும் இதன்போது அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், பாடசாலைச் சூழலை மேலும் சிறப்பூட்டும் ஒரு முயற்சியாக அமைந்தது.




.jpeg)


.jpeg)


.jpeg)

.jpeg)

.jpeg)






