மட்டக்களப்பில் மே தின நிகழ்வுகள், காந்தி பூங்காவில் இடம்பெற்றன!

 

 













மக்கள் அரசுக்கு அதிகாரம்" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மே தின நிகழ்வுகள்  (01.05.2026), இன்று இடம்பெற்றன.

மக்கள் அரசுக்கு அதிகாரம் இன்னும் தொனிப் பொருளில்உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை வலியுறுத்துதல், ஊழலற்ற புதிய தேசத்தை கட்டியெழுப்ப மக்களை ஒன்றிணைத்தல் மற்றும் மாவட்ட ரீதியான பிரச்சினைகளை பிரதிநிதித்துவப்படுத்துதல் போன்றவை உள்ளடக்கி இடம்பெற்றது.
இந்த மே தினப் பேரணி தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின்  மே தின நிகழ்வு கல்லடி  பாலத்திற்க்கு அருகாமையில் ஆரம்பம் பட்டு பிரதான வீதியால் கட்சி கொடியுடன் அலங்கரித்து பேரணியாக வலம் வந்ததோடு,  கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை நடை பவனியாக காந்தி பூங்காவை வந்தடைந்தது 

 இந் நிகழ்வு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, அமைச்சர் சுனில் ஹந்தும்ணெத்தி, கட்சியின் ஆதரவாளர்கள், தொண்டர்கள்,மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள்
மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
இதில் பொலீசார் பலத்த பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்