அரச வெசாக் மகோற்சவத்தை முன்னிட்டு, “ஆரோக்யா” நடமாடும் சுகாதார மருத்துவ முகாம்.

 




அரச வெசாக் மகோற்சவத்தை முன்னிட்டு,  “ஆரோக்யா” நடமாடும் சுகாதார மருத்துவ முகாம் திட்டமொன்று மாத்தறை, மகா மந்தின்த பிரிவெனா விகாரை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் சுகாதார முகாமில் மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் மகா சங்கத்தினர் (தேரர்கள்) மற்றும் மாத்தறை நகரம், கித்தெட்டிய, கொடகம, வல்கம, பம்புரண, நூபே, துடாவ ஆகிய சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கண் சிகிச்சை முகாம், பல் சிகிச்சை முகாம், நீரிழிவு, சுவாசப் தொகுதி தொடர்பான நோய் பரிசோதனைகள், இரத்த அழுத்தப் பரிசோதனை, ECG பரிசோதனை, உடல் நிறை குறியீட்டெண் (BMI) பரிசோதனை, மாதிரிகளைப் பெற்றுக்கொள்ளுதல், கொலஸ்ட்ரால் பரிசோதனை, இரத்த சர்க்கரை பரிசோதனை, பெண்களுக்கான பிரத்தியேக சுகாதார முகாம்கள், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகள், மனநல ஆலோசனை சேவைகள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைகள் என 10-க்கும் மேற்பட்ட மருத்துவப் பிரிவுகளை உள்ளடக்கியதாக இந்த நடமாடும் முகாம் அமைந்துள்ளது.

இந்த நடமாடும் முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களுக்குப் பொதுவான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், இலவசமாக மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளை அரசாங்கத்தின் பிரதான வைத்தியசாலைகளிலுள்ள விசேட நிபுணத்துவ மருத்துவ முகாம்களுக்குப் பரிந்துரைக்கவும் இதன்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.