மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மத்தியஸ்த சபை புதிய உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் திரு உ. உதயஶ்ரீதர் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பட்டிருப்பு வலய வலயக் கல்வி பணிப்பாளர் திரு. சி. சிறிதரன், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனாப். S T M றியாஸ் ஆகியோரும், அத்தோடு களுவாஞ்சிகுடி மக்கள் வங்கி கிளை முகாமையாளர் ஆகியோரும் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டு நியமன கடிதங்களை வழங்கி வைத்தனர்.
இதன் போது மத்தியஸ்த சபை 36 புதிய உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட செயலக மத்தியஸ்த சபை பயிற்சியாளர் திரு M l M ஆஷாத் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வு மற்றும் மத்தியஸ்த சபை தொடர்பான விளக்கங்களையும், தெளிவூட்டல்களையும் வழங்கியிருந்தார்.
இந் நிகழ்வினை பிரதேச செயலக மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. யோ.சுகிர்தராஜா அவர்கள் ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)





