காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னமுனை வாவியிலிருந்து இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி அழககோன் தெரிவித்தார்.
நேற்றிரவு(13)9 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வாவியின் கரையிலிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்திலுள்ள பற்றைக்குள் மனித உருவமொன்று தத்தளிப்பதைக்கண்டு மீனவர்கள் தோணிமூலம் குறித்த இடத்திற்குச்சென்று நபரைக்காப்பாற்ற முயற்சித்து கரைக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் கரையில் வைத்து உயிர் பிரிந்ததாக காப்பாற்ற முனைந்த மீனவர் தெரிவித்தார்.
சுமார் (53) வயது மதிக்கத்தக்க நபர் எனவும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


.jpeg)
.jpeg)





