(மின்மினி மின்ஹா)
சம்மாந்துறை வீரமுனை 03 பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 33 லீற்றர் கசிப்புடன் 40 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (19) கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அவர்களின் ஆலோசனையின் பேரில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார அவர்களின் மேற்பார்வையில், ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். ரிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.





