ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அதிகார பூர்வ விஜயத்தை நாளை மேற்கொள்ள உள்ளார் அதனை முன்னிட்டு மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது





  வரதன் 


 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் வளர்ச்சியே இலக்கு மக்களுக்காக ஒன்றிணைந்து நாட்டை உருவாக்குவோம் எனும்  திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்தி பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதை அடுத்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா நாளை மாவட்டத்திற்கு முதல் தடவையாக அபிவிருத்தி திட்டங்களை மக்களின் பாவனைக்காக கையளிக்கும்  முகமாக வருகை தர உள்ளார்

 அதன் ஒரு கட்டமாக முதலாவது நிகழ்வாக 345 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது பெரிய வாசிய சாலையும் கிழக்கு மாகாணத்தில் முதலாவது மான மட்டக்களப்பு பொது நூலக கட்டடத்தை காலை 9.30 மணி அளவில் திறந்து வைக்க உள்ளார் 

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக கட்டடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் புதிய அரசாங்கத்தினால் முதல் தடவையாக இடம் பெற உள்ளது

 அதனைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணியளவில் 3 வது நிகழ்வாக
 "முழு நாடும் ஒன்றாக"   தேசிய செயல்திட்ட நிகழ்வு
 ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க  அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாணத்தின் தேசிய நிகழ்வாக போதைப்பொருளுக்கு எதிரான  தேசிய செயல் திட்ட நிகழ்வு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற உள்ளது

 இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்பினர் பிரஜா சக்தி உறுப்பினர் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் இவ் விழிப்புணர்வு நிகழ்வில்  கலந்து கொள்ள உள்ளனர்