பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அஞ்சல் வசதிகளுக்கான புதிய முத்திரைகள் ​வெளியிடப்பட்டுள்ளன .

 






பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அஞ்சல் வசதிகளுக்கான புதிய முத்திரைகள் வெளியிடும் நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இங்கு ரூ. 20 மற்றும் ரூ. 70 பெறுமதியான புதிய முத்திரைகள் வெளியிடப்பட்டன.

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்தினால் இந்த முத்திரைகள் வெளியிடப்பட்டிருப்பதுடன், இதன் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களின் பலதரப்பட்ட அஞ்சல் தேவைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர ஆகியோரும், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவி செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, அஞ்சல்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார, பிரதி தபால்மா அதிபர் (செயற்பாடு) எச்.எம்.பிரேமச்சந்திர ஹேரத், முத்திரை பணியகத்தின் பணிப்பாளர் எல்.ஜி.என்.த சில்வா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.