பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர். ஆர். முரளீஸ்வரன் தலைமையில் தொற்றா நோய்க்கு பொறுப்பான வைத்திய அதிகாரி டாக்டர் ம. ருதேஷன் அவர்களின் ஒருங்கிணைப்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஒன்றுகூடல் மண்டபத்தில் 12/5/2026 இல் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர், டாக்டர் பா. மைதிலி, ஆதார வைத்தியசாலைகளின் மருத்துவ அத்தியட்சகர்கள், பேராசிரியர் பி. மயூரதன் , டாக்டர் சத்யசாகரன் (consultant physician) டாக்டர்.வே.பிரேமினி (consultant pediatrician), மேலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொற்றா நோய் வைத்திய அதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரிகள், பிராந்திய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர், மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தலசீமியா நிலைய பொறுப்பு தாதிய உத்தியோகத்தர், சிரேஷ்ட மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியளாளர்கள், அத்துடன் தொண்டு நிறுவனமான Ehed caritas, Rotarac ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது தலசீமியா நோயாளர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கான பல முக்கியமான திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
அத்துடன் பொலன்னறுவை உள்ளிட்ட பிற வைத்தியசாலைகளில் பணியாற்றும் குருதி இயல் நிபுனர் (Consultant Hematologists)
அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுதல் மற்றும் தலசீமியா பரிசோதனை திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்பட்டன.
மேலும் மட்டக்களப்பு பிராந்திய தலசீமியா மையத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்களும் ஆய்வு செய்யப்பட்டன. இதுவரை 48 நோயாளர்கள் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மாதாந்திர அனுமதிகள், இரத்த மாற்று (Blood Transfusion) சேவைகள் மற்றும் பிற புள்ளிவிவரங்களும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டன.
அதேபோல் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் மேற்கொள்ளப்பட்ட தலசீமீயா பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்பான தரவுகளும் முன்வைக்கப்பட்டன. நான்காயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சுமார் 1400 மாணவர்கள் மேலதிக பரிசோதனைக்காக மட்/ போதனா வைத்தியசாலைக்குக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தலசீமியா நோயாளர்களின் சேவைகளை மேம்படுத்தவும், எதிர்காலத்தில் பரிசோதனை அளவுகளை அதிகரிகவும் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் பல பயனுள்ள தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

















