பேராதனைப் பல்கலைக்கழக மாணவி எஸ். சுடர் நிலாவின் நூல் வெளியீடு .

 


முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக மாணவி எஸ். சுடர் நிலாவின் நூல் வெளியீடு பேராதனைப் பல்கலைக்கழக கருத்தரங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது, நேற்றையதினம்(12) பல்கலைக்கழக  நடைபெற்றுள்ளது.

தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். ஸ்ரீ.பிரசாந்தனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாழ்த்துரையினை தமிழ்த்துறை விரிவுரையாளரும் கவிஞருமாகிய ஆன் யாழினி சதீஸ்வரன் வழங்கியுள்ளார்.

 மேலும், நூல் அறிமுக உரையை மருத்துவ பீட மாணவன் கவிஞர் மதுமிதனும், நூல் பற்றிய விமர்சன உரையினை மூத்த கவிஞர் முல்லை முஸ்ரிபா வழங்கியுள்ளனர்.

நிகழ்வில் விரிவுரையாளர்கள் எழுத்தாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்விச் சமூகத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.