ரூபாயின் வீழ்ச்சியால் மொபைல் போன்கள் மற்றும் உதிரிப்பாகங்களின் விலைகள் உயரும் அபாயம்!




Editor.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக, உள்நாட்டு சந்தையில் மொபைல் போன்கள் (Mobile Phones) மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களின் (Accessories) விலைகளை கணிசமாக அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

டொலர் பற்றாக்குறை மற்றும் இறக்குமதிச் செலவுகள் அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணம் என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.