மட்டக்களப்பு தாயக ஊற்று அமைப்பின் ஏற்பாட்டில், அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இ. சிறிநாத் அவர்களின் நெறிப்படுத்தலிலும், அமைப்பின் உறுப்பினர் வைத்தியர் காந்தா நிரஞ்சன் அவர்களின் முழுமையான நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட, பதுளை வீதிப் பகுதியில் அமைந்துள்ள 18 பாடசாலைகளில் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் 165 மாணவர்களுக்கான முதற்கட்ட வலுவூட்டல் செயலமர்வு நேற்று 14.05.2026 வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
இவ் வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட இச்செயலமர்வு இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயம் மற்றும் கித்துள் கிருஸ்ணா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நடைபெற்றது.
மட்டக்களப்பு பிரதேசத்தின் பிரபல கல்வி வளவாளர்களான திரு. ரசீகரன் மற்றும் திரு. சுரேஷ் ஆகியோர் மாணவர்களுக்கான வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் வழங்கினர்.
பங்கெடுத்த மாணவர்களின் கற்றல் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த கால வினா-விடை கையேடுகள் மற்றும் கற்றல் கோப்புகள் என்பன இதன்போது இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
இவ் வலுவூட்டல் செயற்றிட்டம் அடுத்த வாரத்தில் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கோறளைப்பற்று வடக்கு வாகரை கல்விக் கோட்டத்திலும் தொடர்ந்து வருகின்ற மாதத்தில் கோறளைப்பற்று மற்றும் ஏறாவூர்பற்று ஆகிய கல்விக் கோட்டங்களில் இச்செயலமர்வுகள் தொடர்ச்சியாக நடாத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ் ஆரம்பக்கட்ட நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், வளவாளர்கள், தாயக ஊற்று அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)






