ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

 


இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.