நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 5 நாட்கள் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வரவிருக்கும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டும், பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான விடுமுறையினை அடிப்படையாகக் கொண்டும் இந்த விசேட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அந்தவகையில், அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி முதல் மே மாதம் 31 ஆம் திகதி வரை (27.05.2026 – 31.05.2026) விசேட விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் உத்தியோகபூர்வ சுற்றுநிருபங்கள் கல்வி அமைச்சின் ஊடாக அனைத்து மாகாண கல்வித் திணைக்களங்களுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.





