இன்றிலிருந்து 4 நாட்களுக்கு இறைச்சிக் கடைகள் மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மே 27ஆம் திகதி முதல் ஜூன் 02 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை வெசாக் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெசாக் வாரத்தை முன்னிட்டு, ஜூன் 30,31 மற்றும் 01ஆம் திகதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகள், இறைச்சி வெட்டும் கூடங்கள், சூதாட்ட நிலையங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று (27) முதல் ஜூன் 02ஆம் திகதி வரையில் மேற்குறித்த இடங்கள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அரசாங்க விடுமுறையாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.





