மட்டக்களப்பு மாநகர சபையினால் 345 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இலங்கையின் இரண்டாவது பெரிய வாசிக சாலையின் நிர்மாண பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது

 





 



 

 வரதன் 


கடந்த அரசாங்க  ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பாரிய  அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்க அமைய  கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக
 முன்னெடுக்கப்பட்டு வருகின்றது 

இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாநகர சபையினால் 345 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இலங்கையின் இரண்டாவது பெரிய வாசிக சாலையின் நிர்மாண பணிகள்  இறுதிக் கட்டத்தை அடைந்து தற்போது சுற்றுப்புற வளாகத்தை சுத்தப்படுத்தி அழகு படுத்தும் பணிகள்  தற்போது  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

 புதிய அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் முதலாவது பெரிய வாசியசாலை கொண்ட இந்த கட்டிடத் தொகுதியில் பாதுகாப்பிற்கான சுற்றுப்புற மதில் அமைத்தல் நீர் தடாக பூந்தோட்ட பணிகள் சிலைகள் நிறுவுதல் பூச்சு வேலைகள் சுற்றாடல் துப்புரவு பணிகள் மட்டு மானசபையின் பிரதி முதல்வர் s.டினேஷ் தலைமையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

முன்னெடுக்கப்பட்டு வரும் இறுதி கட்ட பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையின்  முதல்வர் சிவம் பாக்கியநாதன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்