இன்று காலை 9.30 மணியளவில் நீலாங்கரையிலுள்ள தனது இல்லத்திலிருந்து
புறப்பட்ட முதலமைச்சர் விஜய், சென்னை வானூர்தி நிலையத்தை வந்தடைந்து,
அங்கிருந்து வானூர்தி மூலம் டெல்லிக்குச் சென்றார்.
டெல்லி வானூர்தி நிலையத்தை வந்தடைந்த அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லியிலுள்ள அரச இல்லத்தில் தங்கி ஓய்வெடுக்கும் முதலமைச்சர் விஜய்,
இன்று மாலை 4.30 மணியளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச்
சந்திக்கவுள்ளார்.
பிரதமரின் அலுவலகமான 'சேவா தீர்த் பவனில்'
இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது, மேகதாது அணை விவகாரம் மற்றும்
தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள்
குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, இன்று மாலை 6.45
மணிக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், இரவு 7.30 மணிக்கு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் முதலமைச்சர் விஜய் சந்திக்கவுள்ளார்.





