இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "சஞ்சாரக உடாவா" கண்காட்சியின் 13ஆவது பதிப்பு இன்று (15) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் (BMICH) ஆரம்பமானது.
இக்கண்காட்சி மே 15 மற்றும் 16 ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ளது.
இலங்கை உள்நாட்டு சுற்றுலாச் சேவை வழங்குநர்கள் சங்கம் (SLAITO) மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் (SLTPB) ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.





