மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் உணவகங்களை பதிவுசெய்தல் மற்றும் உணவு பாதுகாப்பு சம்பந்தமான கருத்தரங்கு-2026.05.18

























 


 

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிக்குட்பட்ட உணவக உரிமையாளர் களுக்கான  உணவு பாதுகாப்பு நடைமுறைசம்மந்தமான  வழிகாட்டல், மற்றும் உணவகங்களை பதிவு செய்தல் சம்மந்தமான  கருத்தரங்கானது. 18.05.2026 அன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கேட்போர் கூடத்தில் 
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்   வைத்திய கலாநிதி 
Dr. R. முரளீஸ்வரன் அவர்களின்  தலமையில் இடம்பெற்றது.

இதில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.  மோகனகுமார் ,  உணவு பாதுகாப்பு வைத்திய அதிகாரி.  Dr.M.அச்சுதன்,  மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி. டொக்டர் T. உதயகுமார் தொற்றா நோய் பொறுப்பு வைத்திய அதிகாரி. Dr. M ருதேஷன், பிராந்திய   உணவு ஔடத பரிசோதகர், பிராந்திய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர், மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். 


இதன்போது  முக்கியமாக 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு இலங்கை சட்டத்தின் பிரகாரம்  சிகரட் வழங்க கூடாது என்றும், பாடசாலைக்கு அண்மித்துள்ள உணவகங்களில் சிகரட் விற்பனை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், சுகாதார நடைமுறைகள், உணவு சேமிப்பு, சட்டப் பொறுப்புகள் மற்றும் அனுபவங்கள் சார்ந்து  விளக்கமளிக்க பட்டதுடன் , உணவகங்களில்   உணவின் தரம் சம்மந்தமாக மக்கள்  முறைப்பாடளிக்கும்  தொலை பேசி இலக்கம் அடங்கிய sticker  ஒவ்வொரு உணவகங்களிலும்  இருக்க வேண்டும்  என தெளிவுபடுத்தப் பட்டதுடன், உணவகங்களை பதிவு செய்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சகல பதிவுகளையும் மேற்கொள்ளும்  கால எல்லையை ஒன்றரை மாதங்களுக்கு  நீடித்துள்ளதுடன்,
 உணவை கையாளுதலில் உள்ள நடைமுறை சவால்கள், சுகாதார,   மற்றும் சட்டரீதியான விளக்கங்களுடன்  கலந்துரையாடல் நடைபெற்றது.