
மட்டு. துஷாரா
உலகெங்கிலும் உள்ள செவிலியர்களின் தன்னலமற்ற சேவையினைப் போற்றும் வகையிலும், நவீன செவிலியர் முறையைத் தோற்றுவித்த 'விளக்கேந்திய மங்கை' புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்தநாளை நினைவு கூரும் வகையிலும் இன்று (மே 12) சர்வதேச செவிலியர் தினம் உலகளாவிய ரீதியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சிகிச்சையளித்தாலும், ஒரு நோயாளியின் குணமடைதலில் 70 சதவீதத்திற்கும் மேலான பங்களிப்பை வழங்குபவர்கள் செவிலியர்களாகும். நோயாளிகளின் உடல் நலத்தை மட்டுமல்லாது, அவர்களின் மன வலிமையையும் பேணுவதில் செவிலியர்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றனர்.
கொரோனா போன்ற இக்கட்டான காலக்கட்டங்களில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, குடும்பத்தைப் பிரிந்து மக்கள் சேவையே மகேசன் சேவை என பணியாற்றிய செவிலியர்களின் தியாகம் ஈடு இணையற்றது.
இத்தினத்தை ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட மையக்கருத்தை முன்வைத்து கொண்டாடப்படுகிறது.
செவிலியர் தொழிலை மேம்படுத்தவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்தவும் இத்தினத்தில் உறுதிமொழி ஏற்கப்படுகிறது.
வெள்ளை உடை அணிந்த தேவதைகளாக, புன்னகையுடன் நோயாளிகளை அரவணைக்கும் அனைத்து செவிலியர்களுக்கும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
நோயாளிக்கு மருந்தை விட ஒரு செவிலியரின் கனிவான பேச்சும் கவனிப்பும் மிகச்சிறந்த நிவாரணியாக அமைகிறது.
அனைத்து செவிலியர்களுக்கும் எமது செய்திப் பிரிவின் சார்பில் இனிய சர்வதேச செவிலியர் தின நல்வாழ்த்துக்கள்!





