ஜப்பானின் தெற்குப் பகுதியில் இன்று (20) 5.9 மெக்னிடியூட் அளவில்
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி முற்பகல் 11:46 மணிக்கு 50 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஜப்பானின்
ககோஷிமா மாகாணத்தில் உள்ள தெற்கு அமமியில் நில அதிர்வு உணரப்பட்டதாக
ஜப்பானிய பிரதமர் அலுவலகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு
தெரிவித்துள்ளது.





