தாழ் அமுக்கப் பிரதேசம் இலங்கைக்கு வடகிழக்காக தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. இது அடுத்துவரும் 36 மணித்தியாலங்களில் நாட்டை விட்டு அப்பால் நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சப்ரகமுவ , மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 150 mm வரையிலான மிகப் பலத்த மழை பெய்யக்கூடும். காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.





