டெங்கு தொற்றினால் 15 மரணங்கள் பதிவாகியுள்ளன .

 


 

 நாட்டில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 28,713 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு தொற்றினால் 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் மருத்துவர் பிரஷீலா சமரவீர இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

டெங்கு பரவல் நிலவரத்தைக் கருத்திற்கொண்டு, நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்கும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் பொதுமக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.