தாய்லாந்தின் புகழ்பெற்ற 'சங்கிரான்'
(Songkran) புத்தாண்டு பண்டிகையின் முதல் மூன்று நாட்களில் ஏற்பட்ட வீதி
விபத்துகளில் குறைந்தது 191 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
உலகிலேயே மிகப்பெரிய 'தண்ணீர் திருவிழா'
என்று அழைக்கப்படும் இந்த கொண்டாட்டங்களின் போது, தாய்லாந்து முழுவதும்
மக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வதால் விபத்துகள் அதிகரித்துள்ளன.
அந்த வகையில் உத்தியோக பூர்வ தகவல்களின்
அடிப்படையில் எடுத்து நோக்கும் போது 951 விபத்துகள் சம்பவித்துள்ளன.
அதேவேளை 911 பேர் காயமடைந்துள்ளனர்.
அதிவேகம் காரணமாக சுமார் 42% உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மது போதையில் வாகனம் செலுத்தியமையின் காரணமாக சுமார் 27.4% விபத்துகள் பதிவாகியுள்ளன.
உந்துருளி விபத்துகளில் தலைக்கவசம் அணியாமையினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.





