PSDG வேலைத்திட்டத்தில் மண்முனைப் பிரதேச சபையின் கீழ் புதுக்குடியிருப்பு மில்லடி வீதிக்கு கொங்கிரிட் இடும் பணி ஆரம்பம்.
மண்முனைப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் கா.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இவ் வேலைத்திட்டத்தில் புதுக்குடியிருப்பு வட்டார பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள் வே.சிவப்பிரகாசம், மு.கிருபேந்திரன் ஆகியோரும் சமூக மட்ட அமைப்புக்களின் தலைவர்கள், கிராமசேவை உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் என பலரும் பங்குபற்றினர்.
மண்முனைப் பிரதேச சபையின் மேற்படி திட்டத்தின் முதலாவது வேலையாக புதுக்குடியிருப்பில் ஆரம்பிக்கப்பட்டதை இட்டு பொதுமக்கள் தவிசாளர் மற்றும் பிரதேச சபையினரை பாராட்டிப் பேசியமை குறிப்பிடத்தக்கதாகும்.
.jpeg)

.jpeg)
.jpeg)






