

இன்று 10.04.2026 உலகின் உன்னதமான நாள்.
சிவானந்த வித்தியாலயத்தின் அருமை, பெருமை தெரிந்தவர்களுக்குத்தான் இது தெரியும். இந்த உலகத்திற்கு அறிஞர்களையும், பல்வேறு துறை வித்தகர்களையும் உருவாக்கிய பெருமை சிவானந்தாவிற்கு சேரும். நல்ல அதிபர்களையும், தரமான ஆசிரியர்களையும் கொண்டு நல்ல மாணவச் செல்வங்களை உருவாக்கி உலகுக்கு படைத்த பெருமையுடன் நிமிர்ந்து நிற்கின்றது சிவானந்த வித்தியாலயம்.
அன்று 10.04.1925 அன்று ஒரு ஆங்கில பாடசாலை அமைய வேண்டும் என்பதற்காக தீர்மானம் எடுக்கப்பட்ட நல்ல நாள்.
இதே நாளில் ஆலய தர்மகர்த்தா k. O. வேலுப்பிள்ளை அவர்கள், தனது குதிரை வண்டியில் கல்லடி துறையிலிருந்து வரவேற்று சுவாமி. விபுலாநந்தரை மேள தாளங்களுடன் பேச்சி அம்பாளை நோக்கி அழைத்து வருகின்றார்.
பேச்சி அம்பாளை வணங்கி பேச்சி அம்மன் கோவிலுக்கு பின் பக்க முற்றத்தில் சுவாமி. விபுலாந்தரும், ஆலய தர்மகர்த்தாவும் பிரதேச மக்களுடன் இணைந்து மேலே கூறிய ஆங்கில பாடசாலையை அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படுகின்றது. அன்று ஆலய தர்மகர்த்தா k. O. வேலுப்பிள்ளை அவர்கள், சுவாமி விபுலானந்தர் அவர்களுக்கு ஒரு வாக்குறுதி அளிக்கின்றார்.
தனக்கு சொந்தமான நிலங்களையும், ஆரம்ப கட்டடத்தையும் தனது தகப்பனாரான கதிர்காமத்தம்பி உடையார் அவர்களும், மாமனாரான சபாபதிப்பிள்ளை உடையார் அவர்களும் இணைந்து சைவப்பாடசாலை அபிவிருத்திகாக (தற்போதைய விவேகானந்தா மகளிர் கல்லூரி )சாசனம் மூலம் கையளிக்கப்பட்ட ரூபாய் 5000 பணத்தையும் ஆங்கில பாடசாலை அபிவிருத்திக்கு தருவதாக வாக்குறுதி அளிக்கின்றார்.
ஸ்ரீ பேச்சி அம்மன் தீர்மானித்து விட்டாள். தனக்கு எதிரே சிவானந்தா என்னும் விருட்சம் அமைய வேண்டும் என்று, தாயாரின் அருளாசியால் அவளின் கண்காணிப்பின் கீழும், அவளது அருள் ஒளியின் கீழும் பாடசாலை அமைய வேண்டும் என்பது நியதியாகி விட்டது. தாயாரே சுவாமி. விபுலானந்தர் அவர்களையும், K.O.V அவர்களையும் வழி நடத்தினாள்.
26.11.1925 அன்று ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பேச்சி அம்மன் ஆசியுடன் சுவாமி. விபுலாநந்தர் அவர்கள் திருக்கரத்தால் அடிக்கல் நடப்பட்டது.
25.04.1928 அன்று ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலயத்தில் வைத்து பிரதேச மக்கள் முன்னிலையில் ஆலய தர்மகார்த்தா K.O. வேலுப்பிள்ளை அவர்கள் 2809 இலக்க சாசனம் மூலம் சுவாமி விபுலாநந்தரிடம் சிவானந்த வித்தியாலய இந்து ஆண்கள் ஆங்கில பாடசாலை ஆரம்ப கட்டிடமும் அது சார்ந்த 1ஏக்கர் - 19 பேர்ச் நிலமும் (T.P இல. 338337), தற்போது விளையாட்டு மைதானம், விடுதிகள் அமைந்துள்ள 9ஏக்கர் -138 பேர்ச் நிலமும் (T.P இல. 357089) தற்போது சுவாமி விபுலாநந்தர் மணி மண்டபம், பாலர் பாடசாலை, சுவாமி விபுலாநந்தர் சமாதி என்பன அமைந்துள்ள K.O வேலுப்பிள்ளை, நொத்தாரிசு க. நல்லதம்பி ஆகியோருக்கு சொந்தமான பிரிபடா நில ஆதனம் 4 ஏக்கர் - 65 பேர்ச் நிலமும் (T. P இல.338332), 24.07.1912 அன்று K, C, V, K கம்பெனியில் கதிர்காமத் தம்பி உடையார், சபாபதிப்பிள்ளை உடையார் (பதிவு இல 101) ஆகியோர் வைப்பிலிட்டிருந்த ரூ. 5000 நிதியுடன்,கதிர்காம தம்பி உடையார், சபாபதி பிள்ளை உடையார் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்ட சைவ பாடசாலையின் (தற்போதைய விவேகானந்தா மகளிர் கல்லூரி)ஆரம்ப கட்டிடம் அதன் சார்ந்த சபாபதிபிள்ளை உடையார் அவர்களின் (பெரியார்வளவு / காட்டுவளவு ) 38.5 பேர்ச், K.O வேலுப்பிள்ளை, K.O. கனகரெட்ணம், நொ. க. நல்லதம்பி, நொத்தாரிஸ் ந. செல்லத்துரை ஆகியோருக்கு சொந்தமான (பெரியார்வளவு / காட்டுவளவு ) 38.5 பேர்ச் காணியும் சுவாமி விபுலானந்தரிடம் ஆலய தர்மகர்த்தா K.O.Vஆல் கையளிக்கப்பட்டது.
15.04.1929 அன்று சமய அனுஷ்டானப்படி சுவாமி விபுலானந்தர் அவர்களால் பாடசாலை திறந்து வைக்கப்பட்டது.
26.11.1929 அன்று பேச்சி தாயாருக்கு முன்பாகவே இராமகிருஷ்ண மிஷன் அமைவதற்கான வித்து இடப்படுகின்றது.
ஸ்ரீ பேச்சித்தயாரின் அருள் ஒளியும், ஸ்ரீ இராமகிருஷ்ணரின் அருள் ஒளியும் இன்று வரை சிவானந்த வித்தியாலயம் என்ற கல்வி கூடத்தை உலகமே திரும்பி பார்க்கும் விதத்தில் உயர்ந்து நிற்க வைத்துள்ளது.
க. குருநாதன்
ஓய்வு நிலை காணி ஆணையாளர்,
முகாமையாளர்.
ஸ்ரீ சித்தி விநாயகர்,
ஸ்ரீ பேச்சி அம்மன்,
ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயங்கள்,
கல்லடி உப்போடை, நொச்சிமுனை.
10.04.2026
.jpg)







