மட்டக்களப்பில் முதன்முறையாக ஒரு புத்தம் புதிய கேமிங் அனுபவத்தை வழங்கும் முகமாக "CueZone" விளையாட்டு தளம் (12/04/2026) காலை திருமலை வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது குறித்த நிலையமானது மட்டக்களப்பு மாநகர முதல்வரினால் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து விளையாட்டு செயற்பாடுகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இங்கு பில்லியர்ட்ஸ் (Billiards), PS5 கேமிங், சதுரங்கம் (Chess) ஆகிய அனைத்து வகையான விளையாட்டு நிகழ்வுகள் ஒரே இடத்தில் இணைக்கும் வகையிலும் கேமிங் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கிலும் இந்த விளையாட்டு தளம் இளைஞர்களின் முன்னெடுப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்தியாளர் - த. ஜெபி ஜனார்த்



.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)




